
வியட்நாமுக்கு சொந்தமான தென்சீன கடல் பகுதிகளை சீனா மிக நீண்ட காலமாகவே உரிமை கோரி வருகிறது.
இந்த குறிப்பிட்ட கடல் பகுதியில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய வளங்கள் நிறைந்துள்ளன.
சீனா இப்பகுதிகள் வரலாற்று ரீதியாக தனக்கு உரியது என கூறி உரிமை கோரி வருகிறது, மேலும் அவ்வப்போது பிரச்சினைகளிலும் ஈடுபடுகிறது.
வியட்நாம் கடல் எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைவது, வியட்நாம் மீன்படி படகுகளை மோதி மூழ்கடித்தல் போன்ற அடாவடித்தனங்களை அவ்வப்போது அரங்கேற்றும்.
இந்த நிலையில் வியட்நாம் அரசு சீனா தொடர்ந்து சீண்டினால் சர்வதேச அளவில் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் என மிரட்டல் விடுத்துள்ளது.