
போர் என்று வரும் போது வீரர்களை எல்லைக்கு உடனடியாக அனுப்பவும் போக்குவரத்திற்கும் உதவும் வகையில் உத்ரகண்ட் மாநிலத்தில் சீன எல்லைக்கு அருகே மூன்று வான் ஓடுதளங்களை அமைக்க அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சமோலி,உத்திர காசி மற்றும் பிதோரகர் ஆகிய பகுதிகளில் இந்த ஓடுபாதைகளை அமைக்க வேண்டும் எனவும் இராணுவ மற்றும் மக்கள் பயன்பாடுகளுக்கு இவை உபயோகப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியா தொடர்ந்து சீன எல்லையில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது.இந்த நேரத்தில் முதல்வர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
உத்ரகண்ட் ஒரு எல்லை மாநிலமாக இருப்பதால் கண்டிப்பாக இந்த மூன்று ஓடுதளங்களும் கடினமான நேரத்தில் பாதுகாப்பு படைகளுக்கு உதவும் என அவர் கூறியுள்ளார்.
இது தவிர அல்மோரா மாவட்டத்தில் சௌகதியா என்னுமிடத்தில் ஒரு புதிய ஓடுதளத்தை உருவாக்கவும் ராவத் அவர்கள் கூறியுள்ளார்.
இது அந்த பகுதியில் இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என அவர் கூறியுள்ளார்.
அமைக்கப்பட்டால் இந்த தளம் சீன எல்லைக்கு வெறும் 25கிமீ தூரத்திலும் பக்கத்தில் உள்ள சீன தளம் 125கிமீ தொலைவிலும் இருக்கும்.அந்த வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கும்.