சீனாவின் முரட்டுத்தனம் அதன் நீண்ட கால நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது அதிபர் ட்ரம்ப் !!

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on சீனாவின் முரட்டுத்தனம் அதன் நீண்ட கால நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது அதிபர் ட்ரம்ப் !!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்கள் இடையே பேசுகையில் இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில் சீனாவின் முரட்டுத்தனமான செயல்பாடுகள் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் எல்லை விவகாரங்களில் அதன் நீண்ட கால செயல்பாடுகளுடன் பொருந்தி போகிறது, இத்தகைய செயல்பாடுகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தோற்றத்தை வெளிபடுத்துகிறது என்றார்.

முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தற்காலத்தில் சீனாவின் விரிவாக்க கொள்கை நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்றார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் எல்லை விவகாரங்கள் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளன, சமீபத்தில் இந்தியாவின் லடாக், தென் சீன கடல்பகுதி மற்றும் கிழக்கு சீன கடல்பகுதி நிகழ்வுகள் இதற்கு உதாரணமாக உள்ளது என்றார்.