2023ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் !!

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on 2023ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் !!

மிக நீண்ட காலமாகவே ராணுவ தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்கள் நீங்கா இடம் பெற்றுள்ளன.

ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதை விடவும் விமானியற்ற முழு அளவிலான ஒரு போர் விமானத்தை வடிவமைப்பது மிகவும் கடினம்.

அப்படி மிகவும் கடினமான தொழில்நுட்பமாக கருதப்படும் இது தற்போது விரைவில் நிஜமாகும் காலம் வரப் போகிறது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனம் “ஸ்கைபோர்க்” எனும் ஆளில்லா போர் விமானத்தை வடிவமைத்து வருகிறது.

இதில் சப்சானிக் மற்றும் சூப்பர்சானிக் வகைகள் இருக்கும். ஒரு சாதாரண போர் விமானத்தை போன்றே செயல்படும் திறனை கொண்டிருக்கும்.

இதில் முழுவதும் தானாகவே இயங்கும் திறன் கொண்ட விமானமும், மனிதனின் உதவியோடு இயங்கும் வகையில் ஒரு விமானமும் என இரு வகைகள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.