அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் சுரங்கபாதை அமைக்க மத்திய அரசு அனுமதி !!

அஸ்ஸாம் மாநிலத்தில் கோஹ்பூர் மற்றும் நுமாலிகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் சுரங்கபாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த புதிய நான்கு வழிப்பாதை மூலமாக வருடம் முழுவதும் தங்கு தடையின்றி போக்குவரத்து நடைபெறும். சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ராணுவ நகர்வுகள் நடைபெற இது உதவும்.

இந்த சுரங்கம் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள டாய்ஹூ ஏரிக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தை விட நீளமானதாகும்.

சுமார் 14.85 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாதை மூன்று கட்டங்களாக கட்டப்பட உள்ளது. இந்த பாதையை எதிரிகள் தாக்குவதும் கடினமானதாகும்.

ஆபத்துகால வழி, தீயணைப்பு வசதிகள், மோதல் தடுப்பு அமைப்புகள், வென்டிலேஷன் வசதிகள் உள்ளிட்டவையும் இப்பணிகளில் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.