
பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பின் தலைவன் நூர் வாலி மெஹ்ஸூத் மீது ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நபரை ஐக்கிய நாடுகள் சபையின் 1267 ஐஸ்ஐஎல் மற்றும் அல காய்தா தடைகள் கமிட்டி சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததுடன்,
வெளிநாட்டு பயணம், சொத்துக்கள் வாங்க ழிற்க தடை, ஆயுத வாங்க விற்க தடை போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி உதவி செய்வது, திட்டமிடுவது, உதவுவது, பங்கேற்பது போன்ற செயல்களுக்காக இவர் மீது இத்தகைய தடைகள் விதிக்கப்பட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பின் அப்போதைய தலைவன் மெளலானா ஃபவ்ஸூல்லா மரணமடைந்ததை அடுத்து நூர் வாலி பொறுப்பேற்று கொண்டான்.
இந்த அமைப்பு பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல், நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் உள்ளிட்ட செயல்களுக்காக அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.