காஷ்மீரில் வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி !!

  • Tamil Defense
  • July 6, 2020
  • Comments Off on காஷ்மீரில் வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி !!

கடந்த சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

இரண்டு பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர், இவர்களில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவன் ஆவான் அவனது பெயர் ஹைதர் என கூறப்படுகிறது.

வீழ்த்தப்பட்ட இரு பயங்கரவாதிகளின் உடலும் சட்ட ரீதியான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போது, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது இருவரின் உடலும் கொரோனா சம்பந்தப்பட்ட விதிகளின்படி பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.