
காஷ்மீரின் அனந்தநாக்கில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
3வது இராஷ்டீரிய ரைபிள்ஸ், காடிபோரா சிறப்பு காவல்படை மற்றும் 116வது சிஆர்பிஎப் படையின் இ கம்பெனி வீரர்கள் இணைந்து நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு பள்ளி ஆசிரியர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.