
இன்று அதிகாலை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாட்டங்கள் தென்படுவதை இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் நௌகம் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பயங்கரவாதிகள் ஊடுருவியதை உறுதிப்படுத்திய நமது வீரர்கள் அவர்களுக்கு வலை விரித்தனர்.
உடனடியாக ஆபரேசனை தொடங்கிய வீரர்கள் இரு பயங்கரவாதிகளையும் வீழ்த்தியுள்ளனர்.அவர்களிடம் இருந்து இரு ஏகே-47 துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.