இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இஸ்ரேலிய துப்பாக்கிகள் !!

உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு இஸ்ரேலிய துப்பாக்கிகளை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளோம்.

இந்த தொழிற்சாலை இந்திய இஸ்ரேலிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். இந்தியாவின் பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேலின் இஸ்ரேலிய ஆயுத தொழிற்சாலை ஆகியவை இணைந்து தோற்றுவித்த தொழிற்சாலை ஆகும்.

கார்மெல் மற்றும் அராட் ஆகிய இரு வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

கார்மெல் துப்பாக்கி 5.56×45 மிமீ காலிபர் திறன் கொண்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது. இந்த துப்பாக்கியை ராணுவத்திலும், காவல்துறையிலும் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

அராட் என்பது அமெரிக்க எம்4 வகையிலான துப்பாக்கி ஆகும். இதனை இருவகையான தோட்டாக்களை சுடும் வகையில் நாம் பயன்படுத்தி கொள்ளலாம் (5.56 மற்றும் 300 பி.எல்.கே).

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகளை உள்நாட்டு தேவைக்கும் ஏற்றுமதிக்கும் பயன்படுத்த திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.