
இந்திய கடற்படைக்கு சுமார் 10,000 கோடி மதிப்பில் 5 டேங்கர் கப்பல்களை கட்ட துருக்கியின் அனடோலு கப்பல் கட்டுமான தளம் தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு காரணமாக இந்த ஒப்பந்தத்தில் தொய்வு ஏற்பட்டது.
ஆனால் தற்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சி காரணமாக இந்த ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி அனடோலு கப்பல் கட்டுமான தளம் டிசைன், முக்கிய கருவிகளை வழங்கி மேற்பார்வை செய்யும்.
இந்தியாவின் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் இந்த கப்பல்களை கட்டி இந்திய கடற்படைக்கு வழங்கும்.
இந்த பணிகளில் இந்திய ஸ்டீல் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது, மேலும் ஏராளமான நடுத்தர நிறுவனங்களுக்கும் பணிகள் கிட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.