கீரீஸ் மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் !!
1 min read

கீரீஸ் மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் !!

கீரீஸ் நாட்டிற்கு சொந்தமான கேஸ்டெல்லோரீஸோ தீவு பகுதியில் துருக்கி அத்துமீறி கடலடி ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும்,

இப்பணிகள் இன்று முதல் வருகிற ஆகஸ்டு மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் இதற்காக ஒருக் ரெயிஸ் எனும் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.

மேலும் இரு எஃப்16 போர் விமானங்களை துருக்கி அந்த தீவு பகுதிக்கு அருகே பறக்க விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கீரீஸ் நாட்டின் ராணுவம் உஷார்படுத்த பட்டுள்ளது, உச்சகட்ட தயார் நிலையில் கீரீஸ் ராணுவம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.