
7)R77M
இது ஒரு இரஷ்யத் தயாரிப்பு ஆகும்.நடுத்தூர ரக ஏவுகணை ஆகும்.மொத்த தூரம் 193km ஆகும்.அதாவது எதிரி விமானத்தை நோக்கி ஏவப்பட்டால் 140கிமீ வரை சென்று தாக்க கூடியது.ஆக்டிவ் ரேடார் ஹோமிங் வழிகாட்டு அமைப்பை கொண்டுள்ளது.மாக் 4 வேகத்தில் சென்று இலக்கை தாக்ககூடியது.இந்த ஏவுகணை நமது வரிசைப்படுத்துதலில் 7வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த ஏவுகணை அதிநவீனமாது.இந்த ஏவுகணையிலேயே பழைய R77 ஏவுகணையை இந்தியவிமானப்படை உபயோகிக்கிறது.இது 80-100கிமீ வரை செல்லக்கூடியது.மிக்-29 அல்லது சுகாய் விமானங்களில் இருந்து ஏவ முடியும்.
6)R33
இதுவும் இரஷ்யத் தயாரிப்பு நெடுத்தூரம் செல்லும் ஏவுகணை ஆகும்.300கிமீ தூரம் வரும் விமானங்களை இந்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தலாம்.இரஷ்யாவின் Mig-31 இடைமறிப்பு விமானத்தின் முக்கிய ஆயுதம் இந்த ஏவுகணை தான்.
அமெரிக்காவின் SR-71 கரும்பறவை,பி-1 லான்சர் போன்ற விமானங்களை அடித்து வீழ்த்தவே இந்த ஏவுகணையை இரஷ்யா மேம்படுத்தியது.
5) I Derby ER
டெர்பி ஏவுகணை இஸ்ரேலிய நிறுவனமான ரபீலின் தயாரிப்பு ஆகும்.அதிகபட்சமாக 100கிமீ வரை உள்ள வான் இலக்குகளை அடித்து வீழ்த்தும் திறனுடையது இந்த ஏவுகணை.இந்தியா மேம்படுத்தியுள்ள தேஜஸ் விமானத்தில் இந்த ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.குறை தூரம் முதல் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக வீழ்த்த வல்லது.
4) மைக்கா EM
பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை 80-100கிமீ தொலைவில் வரும் இலக்குகளை வீழ்த்த வல்லது ஆகும்.மாக் 4 வேகத்தில் இலக்கை தாக்க கூடியது.இந்தியா தற்போது பெற உள்ள ரபேல் விமானங்களோடு இந்த ஏவுகணைகளும் பெறப்படுகின்றன.
3)PL-21
கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய இந்த ஏவுகணை சீனத் தயாரிப்பு ஆகும்.சுமார் 180கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்க கூடியது.அமெரிக்காவின் AIM-120 ஏவுகணைகளுக்கு இணையானது இந்த ஏவுகணை என கூறப்படுகிறது.
2)AIM-120
எய்ம்-120 ஒரு அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணை ஆகும்.180கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.மாக் 4 வேகத்தில் அதாவது மணிக்கு 4900கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.பாக் விமானப்படை இந்த ஏவுகணைகளை கொண்டு தான் இந்திய விமானத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
1) மீட்டியர்
MBDA நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த ஏவுகணை 160கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.உலகின் தலைசிறந்த வான்-வான் ஏவுகணையாக தற்போது உள்ளது.நெடுந்தாெலைவு வளைந்த நெளிந்து செல்லும் இலக்குகளை அழிக்க வல்லது.அடர்ந்த எலக்ட்ரானிக் எதிர்நடவடிக்கை சூழ்நிலையில் கூட சிறப்பாக செயல்பட வல்லது.
திட எரிபொருள் ராம்ஜெட் என்ஜின் உதவியுடன் மாக் 4க்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது.இலக்கை நோக்கி ஏவப்பட ஏவுகணை இரு வழி டேடா லிங்க் வழியாக இலக்கு குறித்த தகவலை பெறும்.இந்த தகவல் மூலம் இலக்கை நோக்கி ஏவுகணை செல்லும்.தேவை என்றால் பாதையை மாற்றி பயணித்து இலக்கை நோக்கி செல்லும்.
இலக்கை அடைந்தவுடன் தனது அதிவெடிப்பு வெடிபொருளுடன் இலக்கை அழிக்கும்.இந்த ஏவுகணையை இந்தியா பெற உள்ளது.
ரபேல் விமானத்துடன் இந்த ஏவுகணையும் வருகிறது.