Breaking News

கேப்டன் அனுஜ் நாய்யர்

28 August, 1975 டெல்லியில் பிறந்ததது வீரம்.அம்மா ,அப்பா இருவரும் டெல்லியில் கல்லூரியில் வேலை.அனுஜ் நினைத்திருந்தால் அவ்வழிய சென்றிருக்க முடியும்.ஆனால் தேர்ந்தெடுத்த பாதை வேறு.

கேப்டன் அனுஜ் 17வது ஜாட் படையில் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.அவரது அப்பா இன்றும் புன்னகையுடன் தனது மகனின் வீரமரணத்தை கண்டு பெருமை கொள்கிறார். பள்ளி நாட்களில் அனுஜ் போன்ற துருதுரு பையனை நினைவு கூர்கிறார்.மொத்த ஆற்றலில் உருவம் என அவரது ஆசிரியை நினைவு கூர்கிறார்.

சிறந்த கைப்பந்து வீரர். என்டிஏவில் பயிற்சி பெற்ற பிறகு இராணுவத்தில் இணைந்த அனுஜ் 1999ல் பாய்ன்ட் 4875 என்ற மலைப்பகுதியை கைப்பற்ற தனது படைபிரிவுடன் அனுப்பப்பட்டார்.

அது முக்கிமயான மலைப்பகுதி .டைகர் மலை என்று அழைக்கப்பட்ட மலைகயினா மேற்கு பகுதியில் அந்த மலை இருந்தது. பாக் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் ஆழமாக வேறூன்றி இருந்தனர்.

முதல் தடைவையான தாக்குதலில் நமது படைகள் பலத்த சேதம் அடைந்தன.பிறகு படை இரண்டாக பிரிக்கப்பட்டது.அதில் ஒரு பிரிவை அனுஜ் பொருப்பேற்க (7 பேர்) பஙகர்களை கைப்பற்ற சென்றனர்.அங்கு நான்கு பாக் பங்கர்களை கண்ட பிறகு வீரத்தோடு போரிட்டனர்.கேப்டன் அனுஜ் ஒன்பது பாக் வீரர்களை கொன்றார்.மற்றும் மூன்று இடை அளவு இயந்திர துப்பாக்கி பங்கரை அழித்தார்.

அவரது தலைமையில் கீழ் செயல்பட்ட படை மூன்று பங்கர்களை கைப்பற்றியது.நான்காது பங்கரை கைப்பற்ற முனையும் போது எதிரியின் கிரனேடு ஒன்று கேப்டன் அனுஜ் மீதே விழுந்தது. இருந்தும் விடாமல் தனது வீரர்களோடு போரிட்டு கடைசி பங்கரையும் மீட்டு 7 ஜீலை 1999 அன்று தனது கடைசி மூச்சை சுவாசித்தார்.

போரில் காட்டிய வீரதீரம் காரணமாக மகாவீர் சக்ரா பெற்றார்