இன்று 21வது கார்கில் வெற்றி தினம்

இன்று 21வது கார்கில் வெற்றி தினம் , இந்திய பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தானிய படைகளை இந்திய ராணுவம் ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கை முலம் 60 நாட்கள் கடுமையாக போரிட்டு விரட்டியடித்து வெற்றி கொண்ட நாள்.
அதனை பற்றிய ஒரு கட்டுரை.

1999 மே மாதத்தில் தொடங்கிய போர் ஜூலை மாதம் முடிவுற்றது. பாகிஸ்தானிய படைகள் 6 செக்டார்களை ஆக்கிரமிப்பு செய்தன , கடல்மட்டத்தில் இருந்து 5கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பகுதிகள் அவை மேலும் தட்பவெப்ப நிலை -48℃ வரை கடும் குளிர் நிலவிய காலத்தில் நடைபெற்ற போர்.

527 வீரர்கள் மரணத்தை தழுவி , 1300க்கும் அதிகமான வீரர்கள் படுகாயமடைந்து , உடலுறுப்புகளை இழந்து கிடைக்கப்பெற்ற வெற்றி இது. அதிலும் கேப்டன் காலியாவும் அவரது வீரர்களும் 22 நாட்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படு உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டது மறக்க முடியாதது. பல வீரர்கள் இன்றும் கை, கால், கண்களை இழந்து நடைபிணமாக வாழ்கின்றனர். ராணுவத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே இறந்தவர்கள், திருமணமாகி சில மாதங்களிலேயே இறந்தவர்கள், பிஞ்சு குழந்தைகளின் தந்தையர் என பலர் உறவுகளையும், நண்பர்களையும் விட்டுவிட்டு நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

இந்த போருக்கு இருக்கும் தனித்துவம் வேறு எந்த போருக்கும் கிடையாது காரணம் இருபெரும் அணுசக்தி நாடுகள் நேருக்கு நேர் மோதிய போர், அதுவும் 60நாட்கள் என்பது சாதாரணமானது அல்ல , உலகின் மிக கடினமான நிலப்பரப்புகளில் ஒன்றில் நடைபெற்ற கடுமையான போர் , தட்பவெப்ப நிலையும் மிக மோசமானது.5000மீட்டரூக்கும் அதிகமான உயரத்தில் நடைபெற்ற போர் என்பதால் போர்க்கருவிகளை அந்த உயரத்திற்கு கொண்டு சென்று போரிட்டது மாபெரும் சாதணை ஆகும்.

இப்போரில் நம் நாடு பெற்ற வெற்றியும் சாதாரணமல்ல , 6 செக்டார்களில் மலை முகடுகளின் மீதும் வீரர்கள் முழு போர் சுமையுடன் ஏறி ,மிகவும் மூலோபாயமான இடத்தில் நன்கு பதுங்கி இருந்த இருந்த எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்று வரலாறு படைத்தது இந்திய இராணுவம். இதுவே இந்திய இராணுவம் மலை பிரதேச போரில் உலகில் தலை சிறந்தது விளங்குகிறது என்பதற்கு எடுத்துகாட்டு , பிந்தைய நாட்களில் அமெரிக்க இராணுவம் கூட இந்திய இராணுவத்திடம் மலை பிரதேச போர் உத்திகளில் பயிற்சி பெற்ற பிறகே ஆப்கானிஸ்தானத்தில் தலிபான்களுடன் போரில் ஈடுபட்டது.

போர் நடைபெற்ற ஆறு செக்டார்கள்,
1) த்ராஸ்
2)டோலோலிங்
3)பாயிண்ட் 4875
4)டைகர் ஹில்
5)கஸ்கார்
6)பட்டாலிக்,பத்ரா டாப்,பாயிண்ட் 5140,பிம்பில் காம்ளக்ஸ்,ஜீபர் டாப்
இவை அனைத்தும் மனித உயிர் வாழ தகுதியற்ற கடுமையான நிலபரப்பும் , காலநிலையும் கொண்ட பகுதிகள்.

கார்கில் யுத்தம் மேற்கே உள்ள ஸோஜிலா தொடங்கி கிழக்கில் உள்ள சியாச்சின் பனி மலைகள் வரையிலான பகுதிகளில் நடைபெற்றது , சுமார் 2,50,000க்கும் அதிகமான இந்திய மக்களின் உயிருக்கு பாகிஸ்தான் படைகளின் தாக்குதலால் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டது.இதனை தடுக்க இந்திய இராணுவமும் , விமான படையும், கடல் படையும் நடவடிக்கை எடுத்தன.

மலைப்பிரதேச போரின் அடிப்படை விதிப்படி மலை முகடுகளின் மேலிருக்கும் எதிரிகளை வீழ்த்த ,1 எதிரி வீரனுக்கு 10 வீரர்கள் தேவை. அதாவது 1:10 விகிதாச்சாரம். ஆனால் நம் வீரர்கள் 4000 பாகிஸ்தானிய வீரர்களை கொன்று அதே நேரத்தில் 527 வீரர்களை இழந்தது . இது குறிபிடத்தக்க சாதனை ஆகும்.

பிரங்கி படையினர் (ARTILLERY) செய்த சாதனைகள் ஏராளம்.
கார்கில் போரில் 2,50,000க்கும் அதிகமான ஆர்ட்டில்லரி குண்டுகள் இந்திய படைகளால் சுடப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 5000 ஆர்ட்டில்லரி குண்டுகள், மோர்டடார் குண்டுகள், எறிகணைகள் 300 பிரங்கிகள்,
மோர்ட்டார்கள், பல்குழல் ஏவு வாகனங்களிலிருந்து சுடப்பட்டன.

டைகர் மலை (TIGER HILL) கைப்பற்றப்பட்ட அன்று மட்டுமே 9000 குண்டுகள் சுடப்பட்டன.
இந்திய ராணுவம் போரில் மும்முரமாக ஈடுபட்டு தாக்குதல் உச்சத்தை அடைந்த போது சராசரியாக ஒவ்வொரு ஆர்ட்டில்லரி பேட்டரியிலிருந்தும் (1 பேட்டரிக்கு 6 பிரங்கிகள்) 1 நிமிடத்திற்கு ஒரு குண்டுக்கும் அதிகமாக 17 நாட்களுக்கு சுடப்பட்டது. இவ்வளவு தீவிரமான பிரங்கி தாக்குதல் அதுவும் நீண்ட காலத்திற்கு 2ஆம் உலகப்போருக்கு பின் உலகில் எங்கும் காணபடவில்லை. இரண்டாம் உலகப்போரில் கூட இத்தகைய தாக்குதல் அளவு சாதாரணமாக காணப்படவில்லை.

பிரங்கி படை வீரர்கள் சரியாக உணவு உட்கொள்ளவில்லை, தூக்கம் என்பது மிக அரிது , எதிரி தாக்குதல், கடுமையான காலநிலை என அனைத்தையும் 60 நாட்கள் சகித்து கொண்டு போரிட்டனர். 60நாட்களுக்கு ஓய்வில்லாமல் இந்திய இராணுவம் முழு மூச்சாக போரிட்டது , பிரங்கி படை வீரர்களுக்கு தொடர்ந்து பிரங்கி இயக்கியதால் கையில் கொப்புளங்கள் உண்டாகியது எனினும் போரிட்டனர்.
இந்திய வீரர்களின் இத்தகைய அர்பணிப்பு உலகம் முழுக்க இருக்கும் ராணுவ வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தியது.அவர்கள் கூறியது இத்தகைய வீரர்கள் வேறு எந்த ராணுவங்களிலும் காண்பது மிக அரிது.

நவீன உலகில் நடைபெற்ற போர்களில் ஆபரேஷன் விஜய் மிக நீண்டதும் , கடுமையானதுமாகும் , த்ராஸ் ,கக்ஸார், பட்டாலிக் மற்றும் டுர்ட்டுக் பகுதிகளில் 12,000 அடி உயரத்திற்கு மேல் இந்திய வீரர்கள் புரிந்த சமர்கள் காலத்தால் அழியாதவையாகும்.

இந்திய கப்பல் படையும் வியக்கத்தக்க வகையில் விரைவாக நடவடிக்கை எடுத்தது. “சம்மர் எக்ஸ்” எனும் பெயரில் போர்பயிற்சி என சாதுர்யமாக அறிவித்து விட்டு, “ஆபரேஷன் தல்வார்” எனும் நடவடிக்கையை தொடங்கியது.
ஒமான் கடல் பகுதியில் இருந்து இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதி வரை பாகிஸ்தானின் அனைத்து கடல் வழி போக்குவரத்து பாதைகளையும் முடக்கியது. பின்னர் ஒருபடி மேலே சென்று கராச்சி துறைமுகத்தை முற்றுகையிட்டது . 30 போர்க்கப்பல்களை கராச்சி துறைமுகத்தில் இருந்து 13 கடல் தொலைவில் நிறுத்தியது , இதன் காரணமாக பாகிஸ்தானில் ஆறு நாட்களுக்கான எரிபொருள் மட்டுமே இருந்தது. இவ்வாறு பாகிஸ்தானை பணிய வைத்ததில் கடல் படை பெரும் பங்காற்றியது.

ஜூலை14 பிரதமர் வாஜ்பாய் ஆபரேஷன் விஜய் வெற்றி என அறிவித்தார்.ஜூலை26 இந்திய இராணுவம் ஒட்டுமொத்த பாகிஸ்தான் படைகளையும் விரட்டியடித்து விட்டதாக அறிவித்து.

போரின் முடிவில் ,விமான படை இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு உலங்கு வானூர்தியை இழந்தது, ஒரு விமானி பாகிஸ்தான் படைகளால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்க பட்டார்.தரைப்படை 527 வீரர்களை இழந்திருந்தது, அதிர்ஷ்டவசமாக கப்பல் படைக்கு எந்த இழப்பும் இல்லை.

4 பரம் வீர சக்ரா
10 மகாவீர சக்ரா
49 வீர சக்ரா
135 சேனா மெடல்
ஆகியவற்றை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு வழங்கி கவுரவித்தது.

நாட்டைக் காக்க பணத்தையும், பல உயிர்களையும் பலி கொடுக்க வேண்டியுள்ளது , தோல்வி பயம் காரணமாக பாகிஸ்தான் அணு ஆயதங்களை தயார்படுத்தியது, உடனே அமெரிக்கா இந்தியா உங்கள் தாக்குதலுக்கு பதிலடி தந்தால் பாகிஸ்தான் மிக மோசமான அழிவை சந்திக்க நேரிடும் மேலும் எந்த நாடும் உங்கள் உதவிக்கு வராது என எச்சரித்ததால் பாகிஸ்தான் பின்வாங்கியது இந்த நிகழ்வு நம் நாட்டிற்கு உலக அரங்கில் இருக்கும் வலிமையை உணர்த்துகிறது.

இத்தகைய மிக மோசமான சூழல்களை மேற்கொள்ளவே ராணுவத்திற்கு செலவு செய்வது கட்டாயமாகிறது .

அமைதிக்கும் இந்த உலகில் விலை உண்டு, விலை கொடுத்தால் மட்டுமே அமைதியை அனுபவிக்க இயலும். !!!

ரெளத்திரம்_பழகு

கார்கில்_வெற்றி

ஜெய்ஹிந்த்

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳