டிக் டாக் குழுமத்திற்கு தடையால் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நஷ்டம் !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on டிக் டாக் குழுமத்திற்கு தடையால் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நஷ்டம் !!

சமீபத்தில் இந்திய அரசு இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், தகவல் திருட்டு மூலமாக பாதுகாப்பு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் சுமார் 59சீன செயலிகளை தடை செய்தது.

இதில் மிகவும் பிரபலமான செயலி டிக் டாக் ஆகும். இந்த பைட் டான்ஸ் எனும் சீன குழுமத்திற்கு உரியதாகும்.

இந்த நிறுவன வட்டார தகவல்கள் இந்தியாவில் டிக் டாக் மூலமாக 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 6பில்லியன் அமெரிக்க டாலர்கள் (45ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டாக் செயலியால் ஏற்படும் இந்த இழப்பு, தடை செய்யப்பட்ட மற்ற 58 செயலிகளின் நிறுவனங்களுக்கு ஏற்படுவதை விட அதிகமாகும்.

மேலும் இதே பைட் டான்ஸ் நிறுவனதாதின் ஹெலோ மற்றும் வீகோ வீடியோ ஆகிய செயலிகளும் தடை செய்யப்பட்ட செயலிகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.