காஷ்மீரில் மூன்று வயது குழந்தையை மீட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர் பவன் குமார் சொவ்பே !!

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on காஷ்மீரில் மூன்று வயது குழந்தையை மீட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர் பவன் குமார் சொவ்பே !!

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பஷிர் அஹமது என்ற முதியவர் கொல்லப்பட்டார்.

தனது மூன்று வயது பேரனுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அநியாயமாக அந்த சிறுவன் கண்ணெதிரே கொல்லப்பட்டார்.

இரத்தம் வழிய கிடந்த தனது தாத்தாவின் உடலின் மீது அச்சிறுவன் கதறி அழுது கொண்டிருந்தான்.

அப்போது அங்கு விரைந்து வந்த மத்திய ரிசர்வ் காவல்படையின் 179ஆவது பட்டாலியனை சேர்ந்த கோப்ரா கமாண்டோ வீரர் பவன் குமார் சொவ்பே உடனடியாக துப்பாக்கி சூடுக்கு இடையிலும் முன்னேறி சிறுவன் அருகே சென்று அவனை தன்னருகில் அழைத்தார்.

அழுது கொண்டே அவரை நோக்கி சென்ற சிறுவனை அணைத்து கொண்டு அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மீட்டு சென்றார்.

இதன் பின்னர் அக்குழந்தை குடும்பத்தினருடன் பத்திரமாக சேர்க்கப்பட்டான்.

தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் உயிரை பணயம் வைத்து குழந்தையை மீட்ட வீரருக்கு ராயல் சல்யூட்.

பவன் குமார் சொவ்பே உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி நகரை சேர்ந்தவர் கடந்த 2010ஆம் ஆண்டு இவர் மத்திய ரிசர்வ் காவல்படையில் இணைந்தார், இவர் ஒரு கோப்ரா கமாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.