பத்கமில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத கட்டமைப்பை தகர்த்த பாதுகாப்பு படைகள் மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது.உளவுத் தகவல்களின் அடிப்படையில் பத்கம் காவல்துறை,53வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,181வது பட்டாலியன் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய அதிரடி ஆபரேசனில் இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெஹ்ரஜ்தின் குமார்,தாகிர் குமார் மற்றும் சாஹில் குர்ரா என கைது செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து 20 ரவுண்டு குண்டுகள்,இரு டெடோனேட்டர்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.