
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மூன்று நக்ஸலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர், இவர்கள் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் கடை மட்ட உறுப்பினர்கள் ஆவர்.
மட்கம் ஜோகா 23, மாட்வி முக்கா 28 மற்றும் மாட்வி தேவா 32 ஆகிய மூவரையும் சட்டீஸ்கர் மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
பேஜி கிவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கொலைகுடா காட்டு பகுதியில் இவர்கள் மாநில காவல்துறையின் DRG மற்றும் STF வீரர்களால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினர் மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.