சந்தேகமே இல்லை இந்தியா தான்-பாக் பிரதமர் இம்ரான்

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on சந்தேகமே இல்லை இந்தியா தான்-பாக் பிரதமர் இம்ரான்

பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் இந்தியா காரணம் என இம்ரான் கான் குற்றச்சாட்டியுள்ளார்.ஆனால் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் பேசுகையில் இந்தியா தான் பாகிஸ்தான் பங்குச்சந்தை மீதான தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளார்.

ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உளவுத்துறை தகவல் முன்னரே கிடைத்ததாகவும் அதுபற்றி அமைச்சரவைக்கு தான் தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு பலூச்சிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பெற்றுள்ள நிலையில் பாக் பிரதமர் இந்த தாக்குதலை முறியடித்ததற்காக பாக் படைகளை பாராட்டி உள்ளார்.

அதே நேரத்தில் இந்தியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.