அதிகரிக்கும் பதற்றம்; விமானப்படை கமாண்டர்கள் அவரச சந்திப்பு

  • Tamil Defense
  • July 22, 2020
  • Comments Off on அதிகரிக்கும் பதற்றம்; விமானப்படை கமாண்டர்கள் அவரச சந்திப்பு

சீனாவுடனான மோதல் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் விமானப்படை கமாண்டர்கள் அவரசமாக மூன்று நாள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று அதாவது ஜீலை 22 புதன்கிழமை முதல் வாயு பவன் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.மூன்று நாட்கள் இந்த சந்திப்பு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த தலைமுறையில் இந்திய விமானப்படை எனும் திட்டம் குறித்து பேசப்பட உள்ளதாக விமானப்படை தகவல் வெளியிட்டாலும் சீனப் பிரச்சனை உச்சம் தொடும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இந்த சந்திப்பை தொடங்கி வைக்கிறார்.மற்றும் விமானப்படை தளபதி ஏர்சீப்மார்சல் பதாரியா அவர்கள் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

ரபேல் விமானத்தை விரைவாக எல்லையில் நிலைநிறுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது.லடாக் பிராந்தியத்தில் இந்த ரபேல் விமானங்களை நிலைநிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.அது தவிர நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் பேசப்பட உள்ளது.

சுகாய்-30எம்கேஐ , ஜாகுவார், மிராஜ் 2000 மற்றும் மிக்-29 என விமானப்படையின் முன்னனி தாக்குதல் விமானங்கள் அனைத்தும் லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.அப்பாச்சி,சின்னூக் மற்றும் ருத்ரா போன்ற நவீன வானூர்திகளும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.