இந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு !!

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on இந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு !!

சீன ஊடக நிறுவனமான ஷின்ஹூவாவில் பணிபுரியும் மூன்று சீனர்களின் விசா காலத்தை நீட்டிப்பு செய்ய இந்திய அரசு மறுத்துள்ளது மேலும் அவர்களை திரும்பி செல்ல கேட்டு கொண்டுள்ளது.

இந்த மூவரும் பல முறை விசா காலக்கெடு நீட்டிப்பு பெற்றுள்ளனர், இவர்களில் ஒருவர் சுமார் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடந்த மாதம் பெங்களூர் சென்று திபெத்திய மக்களை சந்தித்து உள்ளனர், இதனை இந்திய அரசு விரும்பவில்லை.

இவர்களை திரும்ப அனுப்பும் அதே நேரத்தில் இவர்களுக்கு மாற்றாக வேறு நபர்களை அந்நிறுவனம் இந்தியா அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நிய நாட்டவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தங்களது நாட்டிற்கே திரும்ப செல்ல வழிவகுக்கும் சட்டங்கள் இருத்தல் வேண்டும்.

சுற்றுலா வருபவர்கள் 6 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க அனுமதிக்கபட கூடாது .காலக்கெடு முடிந்ததும் உடனடியாக திரும்பி செல்ல வேண்டும்.

பணி காரணமாக வரும் வெளிநாட்டு நிறுவன ஊழியர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் இங்கிருக்க அனுமதிக்க கூடாது .அவர்களுக்கான மாற்று நபரை அந்நிறுவனம் அனுப்பி வைக்க வேண்டும், மேலும் பணி காரணமாக இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போது அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மேற்குறிப்பிட்ட விதியில் இருந்து இந்திய நிறுவன ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கலாம், காரணம் வெளிநாட்டவரோ அல்லது இந்தியரோ அவர் இந்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்கும் இந்திய நிறுவனத்தின் ஊழியர்.

மேலும் மருத்துவ அவசரங்கள் போன்ற அத்தியாவசிய காரணங்களை தவிர காலநீட்டிப்பு இல்லாத விசா மட்டுமே வழங்கும் வகையிலான சட்டங்கள் வேண்டும்.

வெளிநாட்டவர்கள் விசா காலக்கெடு நீட்டிப்பு பெற்று பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே தங்குவது தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்பது எமது கருத்து.