வீட்டிற்கு ஒருவரையாவது இராணுவத்திற்கு அனுப்பும் லடாக் கிராமம்-சுவாரசிய தகவல்கள்

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on வீட்டிற்கு ஒருவரையாவது இராணுவத்திற்கு அனுப்பும் லடாக் கிராமம்-சுவாரசிய தகவல்கள்

63 வீடுகளுடன் லடாக்கில் உள்ள சுசோட் கிராமம் இராணுவத்துடன் ஆழ்ந்த உறவை பேணி வருகிறது.அதாவது தங்களது குழந்தைகளை இராணுவத்திற்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது.வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிகின்றனர்.அவர்களில் பலபேர் தற்போது சீன எல்லையில் முன்னனி நிலையில் பணிபுரிகின்றனர்.

லடாக் ஸ்கௌட்டில் பல தலைமுறைகளாக இங்குள்ள இளைஞர்கள் பணிசெய்து வருகின்றனர்.மிகவும் ஆக்ரோசமானவர்கள் ஆனால் மென்மையானவர்கள்.

34 வயதான வீரமரணம் அடைந்த வீரரின் மனைவியான ஷாரா பானோ அவர்கள் கூறுகையில் தனது மூன்று சகோதரர்களும் இராணுவத்தில் பணிபுரிவதாக கூறினார்.அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.அவர்களும் விரைவில் இராணுவத்தில் இணைவர் என அவர் பெருமையோடு கூறியுள்ளார்.அங்கு சரியான பள்ளி வசதி இல்லை என்பதால் தனது இரு மகள்கள் குறித்த கவலையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹசிரா பானோ எனும் மற்றொரு பெண் கூறுகையில் தன்னுடைய மூன்று சகோதரர்களும் லடாக் ஸ்கௌட்டில் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.அனைவரும் தற்போது சீன எல்லையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார்.

முன்னாள் வீரர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளியிடவும் தவறவில்லை.அவர்கள் கூறுகையில், சிறந்த கல்வியுடன் இங்குள்ள இளைஞர்கள் இராணுவத்தில் அதிகாரிகளாக கூட இணைய முடியும்.தவிர பெண்களும் இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய இது வழிவகுக்கும் என கூறியுள்ளனர்.

முன்னாள் வீரர் ஹவில்தார் குலாம் முகம்மது (1971 போரில் பங்கேற்றவர்) கூறுகையில் சிறந்த கல்வி இங்குள்ள இளைஞர்களுக்கு தேவைப்படுவதாக கூறினார்.இவரது ஒரு மகன் தற்போது கல்வான் பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.