பாங்காங் ஸோ பகுதி தங்களக்கு உரியது என சீனா நிறுவிய 80மீ அறிவிப்பு பலகை !!

  • Tamil Defense
  • July 1, 2020
  • Comments Off on பாங்காங் ஸோ பகுதி தங்களக்கு உரியது என சீனா நிறுவிய 80மீ அறிவிப்பு பலகை !!

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரி பகுதியில் சீன ராணுவம் 80மீட்டர் நீளம் கொண்ட அறிவிப்பு பலகை ஒன்றை நிறுவி உள்ளது.

அதில் பாங்காங் ஸோ பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீன மாண்டரின் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.

இந்த பலகை ஃபிங்கர்4 மற்றும் ஃபிங்கர்5 ஆகியவற்றிற்கு இடையே நிறுவப்பட்டுள்ளது. இதனை எளிதாக விமானங்கள் மற்றும் செயற்கைகோள்கள் வாயிலாக காணும் வகையில் சீனர்கள் நிறுவி உள்ளனர்.

இந்த புதிய அத்துமீறல் கொஞ்ச நாளைக்கு சீனா முரண்டு பிடிப்பதையோ அல்லது எல்லையில் பிரச்சினைகளை உருவாக்குவதையோ நிறுத்தப் போவதில்லை என்பதை மட்டும் தெளிவாக காட்டுகிறது.

ஆகவே இது ராணுவ ரீதியான முடிவுக்கு நகர்ந்தாலும் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் காத்திருப்போம் !!