
ஆஃப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 13 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
அந்நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் உள்ள மிர்ஸா கேல் பகுதியில் இந்த நடவடிக்கை கடந்த 24ஆம் தேதி துவங்கப்பட்டது, இதனையடுத்து சுமார் 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர், நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 18 ஆஃப்கன் தாலிபான்களும், 13 ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளும் அடக்கம் மேலும் 1 ஜெய்ஷ் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பின்னால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ன் கைங்கரியம் கருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது காரணம் ஆஃப்கானிஸ்தானில் அமைதியை சீர்குலைத்து தனது கைப்பாவையாக தாலிபான்களை பயன்படுத்தி கொள்ள பாகிஸ்தான் எண்ணுகிறது.