
இந்திய கடற்படை சீன கடற்படையை இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து தள்ளி வைக்க தனது பலத்தை அதிகரிக்க விரும்புகிறது.
இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படை மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் திட்டத்திற்கான அனுமதியை பெற முயற்சி செய்து வருகிறது.
சுமார் 45,000 கோடி மதிப்பில் 65,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை இந்திய கடற்படை பெற விரும்புகிறது, இக்கப்பலின் பணிகள் நிறைவு பெற 14 வருடங்கள் வரை ஆகும் என தெரிகிறது.
இந்த கப்பல் கட்டுமான திட்டத்திற்கு IAC2 எனவும் கப்பலுக்கு INS விஷால் எனவும் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தவிர இந்திய கடற்படை இரண்டு ஸ்க்வாட்ரன் (இரண்டு படையணிகள்) போர் விமானங்களை பெறவும் விரும்புகிறது.
ஒரு படையணிக்கு 18 விமானங்கள் வீதம் 36 போர் விமானங்கள் ஆகும், இதற்கான போட்டியில் ரஃபேல் எம், மிக்29 கே மற்றும் எஃப் 18 ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.