நீங்கள் பின்வாங்குவதை தவிர வேறு வழியில்லை: சீனாவிடம் இந்தியா !!

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on நீங்கள் பின்வாங்குவதை தவிர வேறு வழியில்லை: சீனாவிடம் இந்தியா !!

இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சீன ராணுவ அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் நீங்கள் பின்வாங்குவதை தவிர உங்களுக்கு வேறு வழியில்லை என கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் தெப்ஸாங் மற்றும் தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் சீனாவின் பயிற்சி எனும் போர்வையிலான படைக்குவிப்பு மற்றும் கட்டுமானங்கள் குறித்தும் பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.