ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆதரவுடன் இந்திய வெளியுறவு கொள்கையில் முக்கிய இடத்தை பெறும் நால்வர் கூட்டணி !!
1 min read

ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆதரவுடன் இந்திய வெளியுறவு கொள்கையில் முக்கிய இடத்தை பெறும் நால்வர் கூட்டணி !!

கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகப்பெரிய மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்க போகிறது.

அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக உலகம் பல்வேறு மாறறங்களை சந்திக்க போகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் நால்வர் கூட்டணி மிகப்பெரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணகர்த்தா வேறுயாருமல்ல சீனாவே தான்.இதன் ஒரு பகுதியாக மலபார் கடற்படை பயிற்சிகளில் ஆஸ்திரேலியாவையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நால்வர் கூட்டணி ராணுவ கூட்டணியாக உருமாற்றம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.

இது நடைபெற்றால் நேட்டோவுக்கு பின்னர் உலகின் சக்திவாய்ந்த ராணுவ கூட்டணியாக இந்த நால்வர் கூட்டணி விளங்கும்.

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சினையில் அமெரிக்கா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அளித்த ஒத்துழைப்பும் ஆதரவும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்தியாவின் பிரதான தேசிய கட்சிகளில் ஒன்றும் எதிர்கட்சியுமான காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்களே வெளிப்படையாக சீனாவுக்கு எதிரான நால்வர் கூட்டணிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். முன்னர் காங்கிரஸ் கட்சி சீனாவின் ஒன் பெல்ட் ஒன் ரோடு திட்டத்தில் இந்தியா இணைய வேண்டும் என பேசி வந்த நிலையில் இந்த மாற்றம் ஆச்சரியம் அளிக்கிறது.

இந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான அபிஷேக் சிங்வி மற்றும் திபேந்தர் சிங் ஹூடா ஆகியோர் நால்வர் கூட்டணியில் இந்தியா மிக முக்கிய பங்காற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை தவிர இந்தியா நால்வர் கூட்டணியில் உள்ள அனைத்து நாடுகளுடனும் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஆக ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் ஏகோபித்த ஆதரவுடன் இந்திய வெளியுறவு கொள்கையில் நால்வர் கூட்டணி மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என கருதப்படுகிறது.