போர் பதற்றம்; அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் எல்லையில் சண்டை 16 பேர் பலி !!

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on போர் பதற்றம்; அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் எல்லையில் சண்டை 16 பேர் பலி !!

மிக நீண்ட காலமாகவே அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை உள்ளது.

நகார்னோ கராபக் பிரச்சினை என அழைக்கப்படும் இது நகார்னோ கராபக் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களை உரிமை கோரி இரு நாடுகளும் ஈடுபட்டு வரும் பிரச்சினை ஆகும்.

இந்த பிரச்சினை காரணமாக இதுவரை மூன்று முறை இந்நாடுகள் போரில் ஈடுபட்டு உள்ளன, மேலும் இருநாடுகள் இடையே எவ்வித அரசாங்க தொடர்புகளும் கிடையாது.

இப்படி நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்தாலும் சண்டை இல்லாமல் இருந்து வந்தது, இந்த நிலையில் தீடிரென செவ்வாய் கிழமை அன்று இருநாட்டு படைகளும் எல்லையில் மோதி கொண்டன.

கனரக பிரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் உபயோகிக்கப்பட்ட இச்சண்டையில் இருதரப்பிலும் 16 பேர் உயிர் இழந்துள்ளனர்.

அர்மீனியா தரப்பில் 4 வீரர்களும், அஸர்பெய்ஜான் தரப்பில் 1 மூத்த ராணுவ அதிகாரி, 10 வீரர்கள், 1 அப்பாவி ஒருவர் உயிர் இழந்துள்ளனர்.

இதற்கு முன் நடைபெற்ற போர்களில் முறையே (1988 – 1994) 28000 -38000 பேர், (மே 1994 – ஆகஸ்ட் 2009) = 3000 பேர், (2010 – 2016) = 467 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த மோதல் போர் பதற்றத்தை உருவாக்கி உள்ள நிலையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியவை சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளன.

ஐ.நா பொது செயலாளர் அன்டனியோ குவட்டரேஸ் இதுகுறித்து கவலை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் துருக்கி அஸர்பெய்ஜானுக்கு மிக உறுதியான ஆதரவை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.