சீனா படையெடுத்தால் தடுப்பது எப்படி என ஒத்திகை செய்யும் தைவான் !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on சீனா படையெடுத்தால் தடுப்பது எப்படி என ஒத்திகை செய்யும் தைவான் !!

நாளுக்கு நாள் சீன அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் தைவான் சீனா படையெடுத்தால் தடுப்பது எப்படி என மிகப்பெரிய போர் ஒத்திகையை துவக்கி உள்ளது.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஒத்திகையில் தைவான் நாட்டின் முப்படைகளும் பங்கு பெறுகின்றன.இந்த பயிற்சியில் கடற்படை விமானப்படை மற்றும் தரைப்படையை சேர்ந்த 8000 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

டைச்சுங் நகரத்தின் கடல்பகுதிகளில் சீன படையினர் வந்து இறங்க தைவானிய விமானப்படை அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போல பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இப்பயிற்சிகளை தைவான் சாய் இங் வென் நேரடியாக மேற்பார்வை செய்தார், பின்னர் ட்விட்டரில் தைவானுடைய ராணுவ வலிமையை பிரதிபலிக்கும் வகையில் இப்போர் ஒத்திகை இருக்கும் என பதிவ செய்தார்.