1 min read
தைவானுக்கு வருமாறு தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுத்துள்ள தைவான் அரசு !!
தைவான் நாட்டின் வெளியுறவு துறை திபெத்திய தலைவரும் ஆன்மீக தலைவருமான தலாய் லாமாவை தைவான் வருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
புத்த மத நம்நிக்கைகளை பற்றி தைவான் மக்களுக்கு எடுத்துரைக்க வருமாறு அழைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பகிரங்கமான அழைப்பு சீனாவை வெறுப்பேற்றுமா நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு தைவானுக்கு தலாய் லாமா அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.