Breaking News

சுபேதார் இம்லியாகும் ஆவோ

தொடர்ந்து சேவையாற்றி நாட்டிற்கு ஊக்கமளிக்கும் மகாவீர் சக்ரா விருது பெற்ற கார்கில் நாயகன்.

சுபேதார் இம்லியாகும் ஆவோ அவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது எதிரிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு வீரதீர செயல் புரிந்தமைக்காக மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் சுபேதாராக பதவி உயர்வு பெற்று தன்னுடைய சேவையை பெருமையோடும் பெருந்தன்மையோடும் தன் நாட்டிற்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

சுபேதார் இம்லியாகும் ஆவோ ஜூலை 25, 1976ல் நாகலாந்து மாநிலத்தின் மோக்கோச்சுங்கில் உள்ள சுசுயிம்பாங் என்னும் கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு ஓய்வுபெற்ற மாநில அரசு பணியாளர் ஆவார்.அவருக்கு நான்கு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.நான்கு சகோதரர்களில் இருவர் மாநிலக் காவல் துறையிலும் ஒருவர் சிவில் சர்வீஸிலும் மற்றொருவர் இந்திய ராணுவத்திலும் உள்ளனர்.

“நானும் என்னுடைய சகோதரர்களும் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தோம் அந்த நாட்களில் நானும் என்னுடைய சகாக்களும் இந்திய ராணுவத்தில் சேர்வதையே பெரும் விருப்பமாக கொண்டிருந்நதாம் .நானும் மற்ற மாணவர்களைப் போலவே ராணுவ வீரர்களின் உடைகள் மற்றும் அவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். எனது ஆசிரியர் என்னை இராணுவத்தில் சேரவும் தாய் நாட்டிற்கு சேவை செய்யவும் ஊக்குவித்தார்.குடும்பத்தின் மூத்த மகன் என்ற முறையில் குடும்ப பொறுப்புகள் அனைத்தும் நான் சுமக்க வேண்டியதாயிற்று.ராணுவத்தில் சேர்வதே சரியான தீர்வு என்று நான் உணர்ந்தேன்”. என்று ஒருமுறை அவர் கூறியுள்ளார்.

தனது படிப்பிற்கு பிறகு அவர் மே 4, 1994 நாகா ரெஜிமென்டின் இரண்டாவது பட்டாலியன் பிரிவில் சேர்ந்தார்.1999இல் மே மற்றும் ஜூலை மாதங்களில் இந்தியா ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் செக்டரில் ஆபரேஷன் விஜய் நடவடிக்கையை தொடங்கியது.இதில் இந்திய ராணுவம் ,வான் படையின் உதவியுடன் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தால் ஊடுருவ பட்ட பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் திட்டம். இதற்காக களமிறக்கப்பட்ட ஒரு சில முதல் பட்டாலியன்களில் நாகா ரெஜிமென்டின் இரண்டாவது பிரிவும் ஒன்று .

இந்த பட்டாலியன் பதான் செக்டரில் இருந்து ட்ராஸ் மற்றும் அடுத்து முஸ்கோ பள்ளத்தாக்கிற்கு நகர்ந்து சென்றது.பாகிஸ்தான் படைகள் வாஷிங்டன் ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அகலாமல் தங்கள் நிலைகளை அங்கு தொடர்ந்து கைப்பற்றி வைத்திருந்தது.அந்த ஒப்பந்தத்தில் நவாஸ் ஷெரீப் தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் Point 4875 complex Twin Bump position ல் இருந்தனர்.அங்கு எதிரிகள் மோர்ட்டார்களுடன் நிலையில் வலுவாக காலூன்றியிருந்தனர்.இதனைக் கைப்பற்ற 2 நாகா ரெஜிமென்ட்டுக்கு ஆணையிடப்பட்டது. அந்த நேரத்தில் காலநிலையும் சாதகமாக இல்லை. ராணுவ வீரர் சுபேதார் இம்லியாகும் இவ்வாறு கூறுகிறார் “தொடர் சண்டை காரணமாக யூனிட் எப்போதும் பணியிலேயே இருந்தது.இதனை சமன்படுத்த காலநிலையும் சாதகமாக இல்லை. கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரமுள்ள முஸ்க்கோ சமவெளிக்கு நகர்ந்து சென்றோம். ஒருபுறம் குண்டுகளிலான தாக்குதல் மறுபுறம் காலநிலை தாக்குதல் இவ்விரண்டையும் சந்தித்தோம்” என கூறுகிறார்.

இந்த மோர்ட்டார் தாக்குதலை நிறுத்தவும் டிவின் பம்ப் நிலையை திரும்ப கைப்பற்றவும் 8 ஜீலை இரவில் நமது படை தாக்குதலை தொடங்கியது.

சுபேதார் இம்லியாகும் 1999ல் செபாய் தான்.தாக்குதல் நடத்திய அணியில் ஒருவராக இருந்தார். அது எதிரி நிலைகளையின் வெளிவட்டத்தை தாக்கி கைப்பற்ற வேண்டும்.அது தான் அந்த தாக்கும் குழுவின் வேலை.

அந்த தாக்குதலில் அவர் எதிரிகளை நேருக்கு நேர் தாக்கினார்.அதாவது எதிரியின் மோர்ட்டார் பிரிவை காவல் காக்க வெளியே நின்ற எதிரி வீரரை நேருக்கு நேராக வெட்ட வெளிச்சத்தில் சென்று வீழ்த்தினார்.

அவர் தன் அணியுடன் தொடர்ந்து முன்னேறி மற்றுமொரு சென்ட்ரி வீரரை தாக்கி கொன்று தொடர்ந்து தனது வீரர்களுடன் சென்று எதிரி பீரங்கி நிலையை சூரையாடினார்.இவ்வாறான தொடர் தாக்குதல் காரணமாக எதிரிகள் பின்வாங்கி ஓடினர்.சுபேதார் (அப்போது செபாய்) அவர்களின் வீரத்தாக்குதல் காரணமாக மூன்று 120mm மற்றும் 81 mm பீரங்கிகள் மற்றும் அதிக அளவிலான வெடிபொருள் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன.

“இது ஒரு கடினமான சண்டையாக இருந்தது இதில் பங்கு கொண்ட அனைவரும் இதன் ஆபத்தை உணர்ந்து இருந்தோம்.நாகர்கள் பிறவியிலேயே வீரர்கள் என்றாலும் ஸ்கௌட்டின் வேலையால் தான் இந்த மிஷினை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது ” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.நடவடிக்கை பகலில் நடந்தாலும் செபாய் இம்லியாகும் அவர்களின் வீரதீர நடவடிக்கையால் நன்கு பாதுகாப்பாக இருந்த எதிரி நிலையை கைப்பற்றப்பட்டது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த வெற்றிகர செயலுக்காக ஆவோ அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது மேலும் சுபேதாராக பதவி உயர்வு பெற்ற அவர் இது “எனது அணி என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு சான்றாகும் நான் என் தாய் நாட்டிற்கு தொடர்ந்து கடமையாற்ற கடன்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.