சீன பொருட்களை மாநில மின் நிறுவனங்கள் வாங்க வேண்டாம்: மத்திய மின்சார அமைச்சர் !!

நாட்டில் பல்வேறு தரப்பினரும் சீன பொருட்களின் இறகாகுமதியை குறைக்க உறுதி பூண்டுள்ளனர்

இந்த நிலையில் மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது மேலும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் சீன நிறுவனங்களை அனுமதிக்க போவதில்லை எனும் நிலைபாட்டை எடுத்துள்ளது.

தற்போது மத்திய மின்துறை அமைச்சர் ஆர் கே சிங் மாநில மின்நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

இந்தியா தனது சூரிய மின்சக்தி திட்டங்களுக்கான 80% பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது மேலும் சுமார் 21,000 கோடிக்கு மின் பகிர்வு சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

ஆகவே இதனை குறைக்கும் பொருட்டு சீன பொருட்கள் மீதான வரிவிகிதத்தை சுமார் 20% சதவிகிதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், பின்னர் இது 40% வரை அதிகரிக்கப்படலாம் எனவும் கூறினார்.

மேலும் சீன பொருட்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கலாம் எனவும் நமது மின்பகிர்வு கட்டமைப்பை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இந்தியாவிலேயே தயாரிப்பதன் மூலமாக வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.