
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து இயங்கி வரும் இந்திய கடலோர காவல்படை பிரிவு ஒன்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை படகை கைபற்றினர்.
அந்த படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, 600கிலோ மீனும் பறிமுதல் செய்யப்பட்டது.
படகை ஆய்வு செய்ததில் மகக நீண்ட காலம் தங்கி இருந்து மீன் பிடிக்கும் வகையில் எரிபொருள் தண்ணீர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
எல்லை தாண்டிய மீன்பிடி படகின் பெயர் மட்டாரா எனவும் அதன் பதிவெண் IMUL A 1345 MTR எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கையில் இந்திய கடலோர காவல்படையின் ஐ.சி.ஜி.எஸ் ப்ரியதர்ஷினி எனும் கப்பல் ஈடுபட்டதாக கடலோர காவல்படை தகவல் வெளியிட்டுள்ளது.