k30 பிஹோ ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியாவுக்கு தென் கொரியா வலியுறுத்தல் !!

  • Tamil Defense
  • July 12, 2020
  • Comments Off on k30 பிஹோ ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியாவுக்கு தென் கொரியா வலியுறுத்தல் !!

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான க்யோங் டூ வுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது இரு அமைச்சர்களும் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை குறித்து பேசினர்.

அப்போது க்யோங் டூ ராஜ்நாத் சிங் இடம் கே30 பிஹோ விமான எதிர்ப்பு அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த அமைப்பை இந்திய ராணுவம் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஷ்யா தனது ஆயுத அமைப்பை சரியாக சோதனை செய்ய இந்திய ராணுவம் தவறியதாக குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் இது ரஷ்யாவின் பொய் எனவும் தனது ஆயுத அமைப்பை வாங்க வைக்க பல்வேறு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் உதவியோடு உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாக ராணுவ தரப்பிலும் பாதுகாப்பு நிபுணர்கள் தரப்பிலும் இருந்து குற்றசாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த சோதனைகளில் ரஷ்யாவின் தரமற்ற டங்குஸ்கா எம்1 மற்றும் பான்ட்ஸிர் ஆயுத அமைப்புகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்திய ராணுவம் மிகவும் தரம் வாய்ந்த தென்கொரிய 130 கே30 பிஹோ அமைப்புகள், 97 ஆயுத வாகனங்கள், 39 கட்டுபாட்டு வாகனங்கள், 4928 ஏவுகணைகள் மற்றும் 1 லட்சத்து 72 ஆயிரம் குண்டுகளை வாங்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு 2.5பில்லியன் டாலர்கள் ஆகும்.