
தென்சீனக்கடல் சீனாவுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியா அது உலக நாடுகளுக்கு பொதுவானது என கருத்து கூறியுள்ளது.மேலும் சுதந்திரமான கடற்பயணம் என்ற கொள்கைக்கு தனது ஆதரவையும் வழங்கியுள்ளது.
தென்சீனக்கடல் உலகத்திற்கு பொதுவானது.எனவே இந்தியா அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை விரும்புகிறது என வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
இந்தியா சீன எல்லைப் பிரச்சனை குறித்த நான்காவது பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் தெரியாத நிலையில் இந்த செய்தியை இந்தியா வெளியிட்டுள்ளது.