கொரோனாவால் உயிர் இழக்கும் துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ மத்திய அரசு முடிவு !!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் மத்திய துணை ராணுவ படைகள் கொரோனாவால் உயிர் இழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் திட்டத்திற்கு அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான திட்ட வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டி துணை ராணுவ படையினர் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய உள்துறையால் தொடங்கப்பட்ட பாரத் கே வீர் திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு உதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

கொரோனாவால் உயிர் இழக்கும் துணை ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு சுமார் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.