
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கோர் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பதின் வயது சிறுமி கமார் குல் (14-16).
இவரது தந்தை ஆஃப்கானிஸ்தான் அரசு ஆதரவாளர் ஆவார், இதன் காரணமாக தலிபான்கள் இவர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர்.
அவரை கொல்வதற்கு தீட்டம் தீட்டி கடந்த வாரத்தில் குறிப்பிட்ட நாளன்று அவரது வீட்டில் புகுந்து அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துள்ளனர், இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே அவரையும் வீட்டை விட்டு இழுத்து இருவரையும் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கமார் குல் அவரது வீட்டில் பாதுகாப்புக்கு வைத்திருந்த ஏகே47 துப்பாக்கியை எடுத்து வந்து தலிபான்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் இதில் இரண்டு தலிபான்கள் கொல்லபட்டனர், பலர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், கமார் குல் மற்றும் அவரது தம்பியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த பதின் வயது சிறுமியின் வீரம் ஆஃப்கானிஸ்தான் மக்களால் சமுக வலைதளங்களில் மெச்சபட்டு புகழப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.