
உளவுத் தகவல்கள் அடிப்படையில் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் ஆறு NSCN (IM) பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர்.
4.30 மணிக்கு இந்த என்கௌன்டர் தொடங்கியுள்ளது.கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு வீரர் காயமடைய கடும் சண்டை தொடங்கியுள்ளது.இதில் ஆறு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.
கிழக்கின் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படை தான் இந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ்…வடகிழக்கின் அமைதி காவலர்கள் இவர்களே..
பாதுகாப்பு பணிகள் தவிர பல்வேறு உதவிகள் மற்றும் சீரமைப்பு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.