
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பல்லன்வாலா சாலையில் 4 பாலங்களும், கத்துவா மாவட்டத்தில் தாரா நல்லா பாதையில் 2 பாலங்களும் சரியான காலக்கெடுவிற்குள் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு கட்டி முடித்து சாதனை புரிந்துள்ளது.
நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணோளி வாயிலாக இந்த பாலங்களை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அப்போது உடன் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த பாலங்களை திறந்து வைத்து பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த பாலங்களை ராணுவத்திற்கு மட்டுமல்ல எல்லையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பேருதவியாக அமையும்.
அப்பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதாரம் மேம்பட இந்த பாலங்கள் உதவும் என்றார் மேலும் இந்த பாலங்களை சரியான காலக்கெடுவிற்கள் கட்டமைத்த எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பையும் அவ்ர வெகுவாக பாராட்டினார்.
கட்டப்ட்ட பாலங்களின் மதிப்பு 43 கோடியாகும், அவற்றின் பட்டியலை கீழே காணலாம்.
1) தர்னாஹ் பாலம் 1 (160மீட்டர்)
2) தர்னாஹ் பாலம் 2 (300 மீட்டர்)
3) பல்வான் பாலம் (91 மீட்டர்)
4) கோதவாலா பாலம் (151 மீட்டர்)
5) பஹாடிவாலா பாலம் (61 மீட்டர்)
6) பன்யாலி பாலம் (31 மீட்டர்)