24 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகள்…முழு ஃபார்மில் இராணுவ வீரர்கள்..!

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அம்ஷிபோரா பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் நடத்திய என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

அதிகாலை தொடங்கிய இந்த என்கௌன்டர் தற்போது வரை நீண்டு வருவதாக அதிகாரிகள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

அதே போல நேற்று குல்கமில் நடைபெற்ற என்கௌன்டரில் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் கன்னிவெடி தயாரிப்பவனும் ஒருவன்.

அவர்களிடம் இருந்து அதிக அளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.