சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு, 7 சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா ??

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on சீன ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு, 7 சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயுமா ??

இந்திய அரசு சீன ராணுவத்துடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்ட ஏழு சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அவையாவன,
1) ஹூவாய்
2) அலிபாபா
3) ஸின்டியா ஸ்டீல்ஸ்
4) ஸின்ஸிங் கேத்தே இன்டர்னேஷனல்
5) டென்ஸென்ட்
6) SAIC மோட்டார் கார்ப்பரேஷன்
7) China எலக்ட்ரானிக் டெக்னாலஜி க்ருப்.

ஹூவாய் நிறுவனத்தை தோற்றுவித்த ரென் ஜெங்ஃபை முன்னாள் சீன ராணுவ அதிகாரி ஆவார்.

அதை போல அலிபாபா, டென்ஸென்ட், பைடூ ஆகிய நிறுவனங்கள் முக்கியமான சீன ராணுவ ஒப்பந்தங்களை பெற்று சீன ராணுவத்திற்கு பணியாற்றி வருகின்றன.

மேலும் இவை இந்தியாவின் ஸோமாட்டோ, ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், ஓலா கேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் மூதலீடு செய்துள்ளன.

ஸின்ஸிங் கேத்தே இன்டர்னேஷனல் நிறுவனம் ஸின்டியா எனும் இரும்பு தொழிற்சாலையை துவங்கி உள்ளது, மேலும் நேரடியாக தொழில் செய்து வருகிறது.

SAIC நிறுவனம் இந்தியாவில் MG வாகனங்களை விற்று வருகிறது, இதன் கிளை நிறுவனமான நான்ஜிங் ஆட்டோமொபைல் மிக முக்கியமான சீன ராணுவ வாகன தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணியாளர் ஆகும்.

அதைப்போல China எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி க்ருப் நிறுவன பணியாளர்கள் டிஜிட்டல் ரீதியாக சீன ராணுவத்திற்கு பல நாடுகளில் தகவல்களை சேகரித்து கொடுத்து சிக்கியுள்ளனர்.

இப்படி பல வகையில் சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் நெருங்கி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.