2வது லெப் புனீத் அவர்கள் மேஜர் ப்ரமோத் அவர்களுக்கு மகனாக 29 ஏப்ரல் 1973 அன்று இராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்தார்.அவரது அப்பா மேஜர் பிரமோத் 1/11 கூர்கா ரெஜிமென்டில் பணியாற்றினார்.இதன் காரணமாக அதே ரெஜிமென்டில் அவரும் இணைய முடிவெடுத்தார்.அவரது தாத்தா
கலோ எஸ்.என்.சி பக்ஷி அவர்களும் இராணுவத்தில் பணியாற்றினார்.அவரது மாமா வி.கே.சி பக்ஷி அவர்களும் கடற்படையில் கமாண்டராக பணியாற்றினார்.விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராகவும் படிப்பில் தேர்ந்தவராகவும் இருந்தார்.
பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.இந்த நாட்களில் ஒரு இராணுவ வீரராக வரவேண்டும் என்ற எண்ணத்தை அதிகரித்தே வந்தார்.கூர்கா இராணுவ உடையை அணிவதை தன் லட்சியமாகவே கொண்டார்.
1991ல் தேசிய பாதுகாப்பு அகாடமிக்குள் நுழைந்தார்.அங்கு தனது தேர்ந்த திறமைகளால் தனது எக்கோ ஸ்குவாட்ரானின் கேடட் செர்ஜன்ட் மேஜர் என்ற பட்டம் பெற்றார்.
நௌசேரா ஆபரேசன் : 20 ஜீலை 1997
படையில் இணைந்த 1½ வருடத்திலேயே இள அதிகாரிகள் பயிற்சி,கமாண்டோ பயிற்சி,தீ அணைத்தல் பயிற்சி ஆகிய பயிற்சிகளை முடித்தார்.1997ல் புனீத் அவர்களின் படைப்பிரிவு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டது.
19 ஜீலை 1997 அன்று நௌசேராவின் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக 2வது லெப் புனீத் அவர்களின் படைக்கு தகவல் கிடைத்தது.அவரது தலைமையில் பயங்கரவாதிகளை அழிக்க படைப்பிரிவு கிளம்பியது.விரைவிலேயே சந்தேகத்துக்குரிய பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.மூன்று மணி நேரம் துப்பாக்கிச்சூடு தொடங்கியது.நிலைமையை உணர்ந்த 2வது லெப் புனித் அவர்கள் தைரியமாக வீட்டை நெருங்கி சுற்றுச்சுவரை தாண்டி வீட்டை நெருங்கினார்.
இந்த நேரத்தில் தப்பிக்க முயன்ற ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினார்.வீட்டின் முதல் மாடியில் பதுங்கி சுட்டுக்கொண்டிருந்த பயங்கரவாதி மீது தொடர்ந்து கிரேனேடுகளை வீசினார்.இரண்டாவது பயங்கரவாதி இந்த நேரத்தில் புனீத் அவர்களை பார்த்துவிட்டு சுட தொடங்கிய சில நிமிடத்துளிகளுக்கு முன் புனீத் சுட்டதும் அந்த பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டான்.ஆனால் அவரையும் சில தோட்டாக்கள் துளைத்து சென்றது.இதனால் படுகாயமடைந்த புனீத் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் வீரமரணம் அடைந்தார்.
தேர்ந்த வீரர் அவர்.நல்ல அதிகாரி.வெறும் 24 வயதில் தாய்திருநாட்டிற்காக உட்சபட்ச தியாகம் செய்தார்.
அவரது உட்சபட்ச தியாகம் மற்றும் வீரம் காரணமாக அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா வழங்கப்பட்டது.அதை அவரது அம்மா பெற்றுக்கொண்டார்.