
இந்தியா தனது முதல் தொகுதி ரபேல் விமானங்களை இன்று பெறுகிறது.மதியம் 2மணி அளவில் இந்தவிமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவற்றை இந்திய விமானப்படை தளபதி பதாரியாக அவர்கள் வரவேற்கிறார்.
இந்நிலையில் அம்பாலா தளம் அருகே அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்கு அந்த பகுதியில் 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.
தளம் அருகே உள்ள நான்கு கிராமங்களில் இந்த தடை போடப்பட்டுள்ளது.
அதே போல வீட்டின் மேற்பகுதியில் நின்று தளங்களை புகைப்படம் எடுப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது என டிஎஸ்பி முனிஸ் சேகல் அவர்கள் கூறியுள்ளார்.
அதே போல தளம் அருகே எந்த வித ஆளில்லா விமானங்களும் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.