இந்திய கடற்படையின் எதிர்கால சூப்பர் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளுக்கு அதிநவீன கடற்படை ஸ்கல்ப் ஏவுகணைகள் !!

  • Tamil Defense
  • July 31, 2020
  • Comments Off on இந்திய கடற்படையின் எதிர்கால சூப்பர் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளுக்கு அதிநவீன கடற்படை ஸ்கல்ப் ஏவுகணைகள் !!

இந்திய கடற்படை ப்ராஜெக்ட்75ஐ திட்டத்தின் கீழ் 6 புதிய அடுத்த தலைமுறை நீர்மூழ்கிகளை பெற விரும்புகிறது.

இதற்கு ஸ்கார்பீன் நீர்மூழ்கியின் மேம்படுத்த பட்ட வடிவமான சூப்பர் ஸ்கார்பீன் இப்போட்டியில் உள்ளது.

தற்போது இந்த நீர்மூழ்கிகளுடன் அதிநவீன ஸ்கல்ப் ஏவுகணைகளையும் தர ஃப்ரான்ஸ் முன்வந்துள்ளது.

இந்த ஏவுகணை ஏற்கனவே ரஃபேல் விமானத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது, ஆனால் இது கடற்படை ரகமாகும், கடற்படை க்ருஸ் ஏவுகணை வகையை சாரந்தது.

ஏற்கனவே ரஷ்யா தனது அமூர் ரக நீர்மூழ்கிகளுடன் காலிபர் மற்றும் க்ளப் க்ருஸ் ஏவுகணைகளை தர முன்வந்துள்ள நிலையில் ஃப்ரான்ஸுடைய இந்த ஆஃபர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.