நீர்மூழ்கி தொழில்நுட்ப தகவல்களை திருடியதாக ரஷ்யா சீனா மீது குற்றச்சாட்டு !!
1 min read

நீர்மூழ்கி தொழில்நுட்ப தகவல்களை திருடியதாக ரஷ்யா சீனா மீது குற்றச்சாட்டு !!

சில நாட்களுக்கு முன்னர் முக்கிய ரஷ்ய விஞ்ஞானியான வலேரி மிட்கோ சீனாவுக்கு வேவு பார்த்ததன் அடிப்படையில் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை பதிவிட்டு அறிந்தோம்.

தற்போது அவரிடம் ரஷ்ய அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் மிக மிக முக்கியமான தகவல்களை சீனாவுக்கு வழங்கியது தெரிய வந்துள்ளது.

ரஷ்ய கடற்படையின் நீர்மூழ்கிகளின் தொழில்நுட்ப ரகசியங்களை அவர் சீனாவுக்கு கசிய விட்டுள்ளார்.

அவரை வீட்டு காவலில் வைத்து விசாரிக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.