
ரஷ்ய கடற்படையின் வடக்கு கட்டளையகம் பேரன்ட்ஸ் கடல்பகுதியில் இந்த வருடத்தின் மிகப்பெரிய போர்ப்பயிற்சியை தொடங்கி உள்ளது.
அணுசக்தியால் இயங்கும் ராட்சத நாசகாரி கப்பலான ப்யோடிர் வெலிகி மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணை கப்பலான மார்ஷல் உஸ்டினோவ் மற்றும் 30க்கும் அதிகமான போர்க்கப்பல்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன.
இவை தவிர சூப்பர்சானிக் குண்டு வீச்சு விமானங்களான டியு22 எம்3 உட்பட 20 விமானங்கள் மற்றும் 40வகையான ஆயுதங்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மாபெரும் படையணியின் தலைமை கட்டளை அதிகாரியாக ரியர் அட்மிரல் அலெக்சாண்டர் மொய்ஸீவ் செயல்படுகிறார்.
இந்த போர்ப்பயிற்சியில் ஏவுகணைகள், ராக்கெட்டுகள், பிரங்கிகள், நீரடிகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி பல்வேறு வகையான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பயிற்சி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடைபெறுகிறது, ஆகவே இப்பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.