லிபியாவில் ரஷ்ய போர் விமானங்கள்; வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் துருக்கி !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on லிபியாவில் ரஷ்ய போர் விமானங்கள்; வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் துருக்கி !!

லிபியாவில் உள்ள அல் ஜுஃப்ரா தளத்தில் 2 ரஷ்ய சு24 ஃபென்ஸர் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.

2 சு24 ஃபென்ஸர் மற்றும் மிக்29 ஃபல்க்ரம் விமானங்கள் உட்பட தற்போது லிபியாவில் 14 ரஷ்ய போர் விமானங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஷ்யா ஹஃப்தார் எனும் முன்னாள் லிபிய ராணுவ தளபதி தலைமையிலான படையினருக்கு ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலையில் ஜி.என்.ஏ என்ற எதிர் குழுவினருக்கு துருக்கி அதி தீவிர ஆதரவு அளித்து வருகிறது, ஆகவே ரஷ்ய போர் விமானங்கள் லிபியா வந்ததை அடுத்த துருக்கி வான் பாதுகாப்பு அமைப்புகளை குவிக்க தொடங்கி உள்ளது.

இந்த நடவடிக்கைகள் மற்றும் ரஷ்யா துருக்கி இடையேயான உரசல்கள் பெருமா பதற்றத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.