
சீனாவுக்கு எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் டெலிவரியை இரஷ்ய நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் எப்போது டெலிவரி செய்யப்படும் என்பதையும் அறிவிக்கவில்லை.
இரஷ்யா இது போன்ற முடிவு எடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது.டெலிவரி நிறுத்தி வைப்பு சீனாவுக்கு பாதகமாக அமையும் எனவும் அது கூறியுள்ளது.
2018ல் சீனா முதல் தொகுதி எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.400கிமீ தொலைவில் வரும் வான் இலக்குகளை தாக்கியழிக்கும் திறன் கொண்டது எஸ்-400 அமைப்பு.
இரு நாடுகளும் நல்ல உறவை பேணிவந்தாலும் சீனா இரஷ்யாவை உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.