ஒரே நாளில் 4 போர்க்கப்பல்கள் மற்றும் 2 நீர்மூழ்கிகளின் கட்டுமான பணியை துவங்கி உள்ள ரஷ்யா !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on ஒரே நாளில் 4 போர்க்கப்பல்கள் மற்றும் 2 நீர்மூழ்கிகளின் கட்டுமான பணியை துவங்கி உள்ள ரஷ்யா !!

நேற்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு கப்பல் கட்டுமான தளங்களில் 6 கலன்களின் கட்டுமான பணிகளை ரஷ்யா துவங்கி உள்ளது.

செவர்நாயா கப்பல் கட்டுமான தளத்தில் 2 ப்ராஜெக்ட்22350 ரக ஃப்ரிகேட் கப்பல்களின் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன, இரண்டு கப்பல்களும் முறையே அட்மிரல் யுமாஷெவ் மற்றும் அட்மிரல் ஸ்பிரிதோனோவ் என அழைக்கப்படும். இங்கு ஏற்கனவே 5 ப்ராஜெக்ட்22350 கப்பல்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது அவற்றில் முதலாவதான கஸாடோனோவ் விரைவில் படையில் இணைய உள்ளது.

அதை போல கெர்ச் நகரில் உள்ள ஸாலிவ் கப்பல் கட்டுமான தளத்தில் 2 பல உபயோக ஹெலிகேரியர் கப்பல்களை கட்டும் பணி துவங்கி உள்ளது. இதன் மதிப்பு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

இந்த ரக கப்பல்கள் சுமார் 25,000 டன் எடையும், 220 மீட்டர் நீளமும் கொண்டிருக்கும், மேலும் இவற்றால் 20 கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 900 மரைன் வீரர்களை சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போலவே ஸெவேரோட்வின்ஸ்க் நகரில் உள்ள ஸெவ்மாஷ் கப்பல் கட்டுமான தளத்தில் 2 ப்ராஜெக்ட்885எம் யாஸென் எம் ரக தாக்குதல் நீர்மூழ்கிகளின் கட்டுமான பணிகள் துவங்கி உள்ளது.